நாட்டுக்ககு திறந்த கணக்கு மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி ஜூலை 01 முதல் வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர் விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்தப்படும் முறையே திறந்த கணக்கு முறையாகும்.
இந்நிலையில் இதற்கு முன்னரும் இந்த வங்கிக் கணக்கு முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.