இலங்கையில் சட்டவிரோதமான முறையிலான பண பரிமாற்றும் முறையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில் உண்டியல் முறை மூலம் பண பரிமாற்றம் செய்யும் முகவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் புறக்கோட்டை மற்றும் மாளிகாவத்தையில் ஆகிய பகுதிகளில் பெருந்தொகை வெளிநாட்டு நாணயத்துடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 19 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.