யாழ்.கோண்டாவில் பகுதியில் கட்டட ஒப்பந்தகாரர் ஒருவருடைய வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான கட்டடப் பொருட்களை கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான நில மாபிள்கள், கழிவறைக்கு பயன்படுத்தும் மாபிள் உபகரணங்கள் , மின் மோட்டார் மற்றும் மின் வயர்கள் இலத்திரனியல் உபகரணங்கள் என்பன கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இலட்சம் ரூபா பெறுமதி
சுமார் இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.