வவுனியா – கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. இதன்போது அங்கு புதிதாக வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்கள் தீயில் எரிந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும் புதிதாக பொருத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய மின்கலங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நகரசபையின் தீயணைப்பு பிரிவுடன், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்