போராட்டக்காரர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேறறு பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), குடிமகனின் அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்துரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அமைதியான போராட்டங்களை நசுக்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துமாறும் பொலிஸாருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
14(1) (அ) பிரிவின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிப்பது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்கக்கூடியது என்று அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஐஜிபி உரிய வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.