புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றும் நாளை மறுதினம் மாத்திரம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ரமழான் தினமான நாளைய தினம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது