தனது காதலனால் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மெதிரிகிரிய – அம்பகஸ்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
இந்த பெண் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தனது காதலனுடன் இந்த வீட்டில் சிறிது காலம் வசித்து வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று அம்பகஸ்வெவ பிரதேசத்தில் தலை மறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.