இன்று முதல் வரும் 3 தினங்களுக்கு கலன்கள் மற்றும் பீப்பாய்களில் டீசல் மற்றும் பெற்றோல் விநியோகிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினார். அதேசமயம் நாட்டில் எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக, தங்களது கிராம சேவகர் மற்றும் கமநல உத்தியோகத்தரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும் தேவையான அளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளதால், அதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை , எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய், கலன்களிலும், பீப்பாய்களிலும் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.