மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்துக் காட்ட கூடிய அற்புத நாளாகும். பொருளாதார ரீதியான பிரச்சினையை சமாளிக்க பல இடங்களில் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாப்பிடியான முயற்சிக்கு பலரும் இடையூறாக இருக்க வாய்ப்புகளுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு மன குழப்பம் இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதை செய்ய நினைக்கிறீர்களோ, அதை செய்ய முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருக இருக்கிறது. உங்களுடைய திறமையை வெளி உலகிற்கு காண்பிக்க முயற்சி செய்யுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் அற்புத நாள் என்பதால் சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும் எனினும் உற்சாகத்திற்கு குறைவிருக்காது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். பொறுப்புகள் அதிகரிப்பதால் உங்களுடைய உடல் நலனில் அக்கறை இல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானம் சீராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிட பயணங்களின் மூலம் புதிய நட்பை வளர்த்துக் கொள்வீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறை ஏற்படும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மனக் கசப்புகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சுயதொழிலில் பன்மடங்கு லாபம் காண இருக்கிறீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடிவந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை தெளிவாக இருக்கும். நீண்டநாள் குழப்பங்கள் தீர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். வெளியிட பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் இடத்தில் பாராட்டு வாங்க வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அனுகூலமற்ற அமைப்பின் காரணமாக எதிலும் காலதாமதம் உண்டாகும். பொறுமையை கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பேச்சில் இனிமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். வேகம் விவேகம் அல்ல!
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினருடைய ஆதரவு கிடைக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு போக்குவரத்து தொடர்பான அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் உண்டு என்பதால் நீங்கள் எந்த ஒரு முடிவையும் தைரியமாக எடுக்கலாம். விட்டுச்சென்ற உறவு உங்களை தேடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். தொழில் தொடர்பான உபகரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழி சுமத்த நேரம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல பலன்களைக் காண இருக்கிறீர்கள். ஆழ் மனதில் இருக்கும் போட்டி, பொறாமைகளை தவிர்த்து வெற்றியின் இலக்கை நோக்கி பயணிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சம நிலை நீடிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.