முல்லைத்தீவில் காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவர் மீட்கப்பட்டுள்ளான். முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் மாலைநேர வகுப்பிற்காக சென்ற மாணவரை காணவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேடப்பட்ட சிறுவன் வவுனியாவில் கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளான். முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் சாதாரணதரத்தில் கல்வி கற்று வரும் கே.சானுயன் என்ற சிறுவன் கடந்த 17.03.2022 அன்று மாலைநேர கல்விக்காக மாலை 6.00 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதன்பின்னர் 28.03.2022 திகதிவரையும் இவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்லையில் ஊடகங்களில் சிறுவனை காணவில்லை என வெளியான தகவலை தொடர்ந்து வவுனியாவில் கடை ஒன்றில் வேலைசெய்து கொண்டிருந்த போது மாணவர் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.