உக்ரைன் மீது ரஷ்யா 32-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. தலைநகர் கீவ்வை கைப்பற்ற வேண்டுமென ரஷ்ய துருப்புகள் மும்முரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இருநாட்டு படைகளும் கடுமையாக மோதி வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எந்த ஒரு பிராந்தியத்தையும் விட்டு கொடுக்க ஒப்புக்கொள்ள முடியாது எனவும் ஜெலன்ஸ்கி உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதனிடையே, போர் விமானங்கள், டாங்கிகள் போன்ற கூடுதல் உபகரணங்கள் இன்றி மரியுபோல் நகரை காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ள அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோ நாடுகள் வசம் உள்ள ஆயுதங்களில் வெறும் 1 சதவீத ஆயுதங்கள் மட்டுமே தேவைப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.