குரங்கு கூட்டத்தை விரட்டியடிக்க போலித் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் மீது ஆத்திரமுற்ற குரங்கொன்று, இளநீரை பறித்து, அவரது தலையில் வீசிய சம்பவமொன்று கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கேகாலை நகரத்துக்கு அப்பால் உள்ள மலைப்பிரதேச கிராமம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தக் கிராமத்தில் 78 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை தனது மனைவியுடன் வசித்து வருகின்றார்.
தம்பதியினரின் மூன்று பிள்ளைகள் திருமணமாகி வெளியிடங்களில் வசித்து வருகின்றனர். இளைய மகன் தாய் தந்தையின் வீட்டுக்கு அருகே புதிய வீடுடொனனன்றை நிர்மாணித்துக் கொண்டு மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
வயோதிப தம்பதியினர் தனியாக பூர்வீக வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தத் தம்பதிகளுக்கு சொந்தமாக 4 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. அந்த தென்னை மரங்களில் உள்ள இளநீரைப் பறித்துச் சாப்பிட தினந்தோறும் அங்கு 40க்கும் மேற்பட்ட குரங்கு கூட்டம் வருவதுண்டு.
ஒரு நாள் காலையில் தென்னந் தோட்டத்தில் குரங்குகள் இருப்பதை பார்த்த அந்த வயோதிபர் வெடிகளை கொளுத்திப் போட்டார். அப்போதும் குரங்குகள் போகாததால் சப்தம் எழுப்பும் போலிதுப்பாக்கியை எடுத்து வந்து குரங்குகளைப் பார்த்து குறி வைத்தார்.
இதன்போது ஒரு குரங்கு இளநீரை பறித்து அந்த வயோதிபரின் தலையில் வீசியதை அடுத்து வயோதிபர் கூக்குரலிட்டபடி வீட்டை நோக்கி ஓடியதாக கூறப்படுகின்றது.