மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட மந்தமான சூழ்நிலை நிலவும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி உறவில் நெருக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும். தடைகளைத் தாண்டி தன்னம்பிக்கையுடன் முன்னேறக் கூடிய நாளாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அமோகமான பலன் உண்டு. சுற்றி இருப்பவர்கள் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் அமையும். கவலைகள் நீங்கி புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்கும். புதிய உத்திகளையும் கையாண்டு விருத்தி அடைய செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகளை அதிகரித்து காணப்படும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கடமையில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வார்த்தைகள் மூலம் தேவையற்ற மனக் கசப்புகள் ஏற்படலாம் எனவே கவனம் தேவை. பெரியவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இருந்து தேவையற்ற தொல்லைகள் வரலாம். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வருமானம் பெருகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைந்து காட்டுவீர்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். புதிய வாய்ப்புகளை ஈட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் வலுவாக கூடும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி அவர்கள் மூலம் அனுகூல பலன் காணலாம். தொலை தூர இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள நேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளதால் இதை வைத்து விசுவாசிகளின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது உத்வேகம் பிறக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. மனதில் இருந்து வந்த கெட்ட விஷயங்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண விஷயத்தில் கவனம் தேவை. இந்த மனிதர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகளுக்கு உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வது தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவரும் அவர்களுக்கு பண விஷயத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பணம் பல வழிகளிலும் இருந்து வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி சுறுசுறுப்பு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டிய நேரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த நெருக்கம் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய முடிவுக்கு ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற இழப்புக்களைச் சந்திக்க நேரும் என்பதால் கூடுமானவரை உங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக போட்டியாளர்களை எதிர்த்து போராடுவீர்கள்.