புடின் உக்ரைனைக் கைப்பற்றினால், அத்துடன் அவர் நிற்கமாட்டார், ஏனென்றால், புடினுக்கு மேலும் மேலும் நாடுகள் வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி மேற்கத்திய நாடுகளை எச்சரித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கிவ்வில், பாதுகாப்பாகப் பங்கர் ஒன்றில் இதுவரை தங்கியிருந்த உக்ரைன் ஜனாதிபதியான வோலோட்யம்யர் ஜெலன்ஸ்கி(44), தனது மறைவிடத்திலிருந்து வெளியே வந்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்குத் திரும்பிய ஜெலன்ஸ்கி ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஊடகங்களுக்குப் பேட்டிகள் அளித்தபோது தெரிவிக்கையில்,
நான் இங்குதான் இருக்கிறேன், நான் ஒளிந்திருக்கவில்லை, எனக்கு யாரைக் குறித்தும் பயம் இல்லை. உரிமைகளும், சுதந்திரமும் மீறப்பட்டு நாங்கள் மிதிபடும்போது, நீங்கள் எங்களைப் பாதுகாக்கவேண்டும். இன்று எங்கள் நாட்டில் யுத்தம் நடக்கிறது, நாளை அது லிதுவேனியாவில் நடக்கும்.
பிறகு போலந்தில், அதற்குப் பிறகு ஜேர்மனியில் நடக்கும். புடின் உக்ரைனைக் கைப்பற்றினால், அத்துடன் அவர் நிற்கமாட்டார், நாங்கள் முதலில், இரண்டாவது நீங்கள், ஏனென்றால், புடினுக்கு மேலும் மேலும் நாடுகள் வேண்டும்” இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.