நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் தற்காலிக திருத்தங்களில் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை.
எனவே அவற்றுக்கு திருத்தங்கள் அவசியம்.
அத்துடன் ஏனைய சில திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே உள்ளுார் மற்றும் வெளிநாடுகளின் அழுத்தங்களின் பேரில் அரசாங்கம், பயங்கரவாத தடுப்பு சட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
எனினும் இந்த திருத்தங்களிலும் போதுமானவையல்ல என்று தமிழ் தரப்புக்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.