மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் தன லாபம் பெருக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அதிகம் உழைக்க கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிருப்தி அடைய கூடிய நாளாக இருக்கும் எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்ப தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய நபர்களை அணுகுவதில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற வெளிநபர் சேர்க்கையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி உறவில் விழுந்த விரிசல் மறையும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சகிப்பு தன்மை அதிகரிக்க கூடிய நாளாக இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவுகள் தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல தடைகளை தாண்டி முன்னேற கூடிய இனிய நாளாக இருக்கிறது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட லாபம் பன்மடங்கு பெருகும். வியாபாரம் விருத்தி அடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு சிறப்பாக இருக்கும். தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்தால் வெற்றி நடைபோடுவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு எதையும் சமாளிக்க கூடிய மனப்பக்குவம் பிறக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். செய்தல் மற்றும் வியாபாரத்தில் சமூகத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. தேவையற்ற பேச்சு வார்த்தைகள் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் வெற்றி வாகை சூட இருக்கிறீர்கள். மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டுக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய உத்திகளை கையாண்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவாலான விஷயங்களை கூட எளிதாக எதிர் கொண்டு விடுவீர்கள். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கும் விரிசல் நீங்கும். புதிய புரிதல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல், எவரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்கள் அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை தயங்காமல் உறுதியாக எடுத்து வைப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் உண்டாகும். மறைமுக போட்டியாளர்கள் தொல்லை மறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படுவீர்கள். கேட்டது கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். புதிய உத்திகளை கையாளுவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முடிவுகளுக்கு உங்கள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதுமையை படைக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் உடையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவு பெருகும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணப்புழக்கம் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.