மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானம் கடைபிடிப்பது மிகவும் நல்லது. கணவன் மனைவி இருவரும் தேவையற்ற பேச்சு வார்த்தைகளைத் தவிர்த்து, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி ஏற்படும். உத்யோகத்தில் சக போட்டியாளர்கள் எதிர்பார்ப்பார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் அடிகள் வெற்றி வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் இடைப்பட்டுக் கொண்டிருந்த குறுக்கீடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் வரவு சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. எதிர்பாராத நேரத்தில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் நீங்கள் செயலாற்றுவீர்கள். இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி தென்படும். மனதிற்கு பிடித்தவர்களை மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு நன்மைகள் நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முக்கிய முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது. எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுங்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அமைதியுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து உங்கள் வழியில் நேர்மையாக செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பழைய விஷயங்களை கடந்து முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பண விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சோர்வு காணப்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடையக் கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. தொலை தூர இடங்களில் இருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திடீர் பயணங்கள் ஏற்படலாம். பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை மேலோங்கி காணப்படும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளை தாண்டி முன்னேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் பெருகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். வருவது வரட்டும் என்று விட்டுவிட்டு உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த கடன் தொல்லைகள் படிப்படியாக குறையும். பழைய பாக்கிகள் வசூலாகக் கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு அதிகரிக்கும். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரியும். தொலைதூர இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய செய்திகள் பயனுள்ளதாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கைகூடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இனக்கம் தேவை. தேவையற்ற பேச்சு வார்த்தைகள் ஆபத்தை கொடுக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.