ரஷ்யாவில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களிற்கு அபராதம் விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சட்டம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என ரஷ்ய சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின் (Vyacheslav Volodin) தெரிவித்துள்ளார்.
அத்துடன் குற்றங்களிற்காக 15 வருடம் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யாவில் போர் இன்று 9 ஆவது நாளாகவும் தொடர்ந்துவரும் நிலையில், பிபிசி உட்பட பல ஊடக வலைத்தளங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக ரஷ்யாவின் ஊடக கண்காணிப்பு அமைப்பு வெள்ளிக்கிழமை கூறியது.
அதன்படி பிபிசியின் இணையத்தளங்கள், மெடுசா என்ற சுயாதீன செய்தி இணையதளம், ஜெர்மன் ஒளிபரப்பாளர் Deutsche Welle, மற்றும் அமெரிக்க நிதியுதவி பெற்ற ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா/ரேடியோ லிபர்ட்டி, ஸ்வோபோடாவின் ரஷ்ய மொழி இணையதளம் ஆகியவற்றுக்கான அணுகல் Roskomnadzor ஆல் “வரம்பிடப்பட்டது” என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை நோக்கி ரஷ்ய துருப்புக்கள் “எல்லா பக்கங்களிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றன” என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba) தெரிவித்துள்ளார்.
“இது வெடித்தால், அது சோர்னோபிலை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும்!” என்றும் அவர் (Dmytro Kuleba) ட்விட்டரில் எச்சரித்தார்.
அதேவேளை 36 ஆண்டுகளுக்கு முன்பு செர்னோபிலில் ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்து, வரலாற்றின் மிக மோசமான அணுசக்தி பேரழிவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் அங்கிருந்து கதிரியக்கத்தன்மை இன்னும் கசிந்து கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு அணுமின் நிலைய விபத்தைப் பற்றியும் உக்ரைன் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.