மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற கிரக அமைப்புகள் இருப்பதால் கூடுமானவரை நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருப்பது நலம் தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். சுய தொழிலில் லாபம் காணலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த வேலைகள் முடியும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நல்ல ஒரு பலனை காண இருக்கிறீர்கள். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை வெளியிட பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய ஒவ்வொரு அடியிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தனலாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் திடீரென எடுக்கும் முடிவுகள் மூலம் தேவையற்ற இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு நீண்டநாள் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வாய்ப்புகள் கிடைக்கும். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொடங்க இருக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் மேலோங்கும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு தடைகளையும் எதிர்த்து துணிச்சலுடன் போராடக் கூடிய தன்னம்பிக்கை வளரும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்று செயல்படுவீர்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான நல்ல பலன்கள் உண்டு. சுயதொழிலில் இரட்டிப்பு லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் இருந்து வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சேமிப்பு உயரும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளைத் தாண்டி முன்னேற கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணத்தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பேச்சில் பொறுமையை கையாளுவது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சொல்லும் சொல்லி உறுதியாக நிற்க கூடிய அமைப்பு உள்ளது. தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து உங்கள் வழியில் நடப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். பொருள் சேர்க்கை உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பல இடங்களிலிருந்தும் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மற்றவர்களுடைய பேச்சைக் கேட்காமல் சுய முடிவு எடுப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு உற்சாகம் இருக்கும்.