எரிபொருள் கிடைக்காததாலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்ந்துள்ளதாலும் இன்று முதல் இலங்கை தனியார் பஸ் சேவைகள் குறைப்பப்படவுள்ளன.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளும் நாளொன்றுக்கு ஓட்ட எண்ணிக்கையில் 50 வீதமாக குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிபொருள் விநியோகம் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், தனிப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக எரிபொருள் நிரப்பும் போது பஸ் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.