வடமராட்சி – கிழக்கு குடத்தனை பொற்பதியில் இரண்டு வீடுகள் இனம் தெரியாத குழுவினரால் அடித்து நொருக்கப்பட்டமையால் வீட்டின் சீற், ஜன்னல் கண்ணாடிகள், குளிர்சாதனப்பெட்டி, வேலி என்பன சேதமடைந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுபோதையில் வந்த கும்பல் ஒன்று வீதியில் வெற்று கண்ணாடி போத்தல்களை உடைத்து துண்டங்களாகப் போடுவதைத் தட்டிக்கேட்டதன் விளைவாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் கண்ணாடி போத்தல்களை உடைக்க வேண்டாம் என ஒரு குழுவினரிடம் சேதமாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அதனால் ஆத்திரமற்ற நான்கு பேர் கொண்ட வன்முறை குழுவினர் நேற்று இரவு 8:15 மணியளவில் வாள்களுடன் அந்த நபரின் வீடுகளுக்குச் சென்று ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அத்துடன் வீட்டு சீற், வேலி என்பனவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன், குளிர்சாதனப்பெட்டியும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
குறித்த வீதியில் கண்ணாடி உடைக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த 25/02/ 2022 அன்று ஏற்பட்ட முரண்பாட்டில் நான்கு பேர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டமையினால் மூவர் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் நால்வர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு வீடுகள் உடைப்பு சம்பவங்களுடன் தொடர்பு பட்ட நபர்கள் சுதந்திரமாக நடமாடி வருவதாகவும் இதனால் குறித்த பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.