இலங்கையில் நாளை திங்கட்கிழமை (28-02-2022) திட்டமிட்ட சுழற்சி முறையிலான மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து A,B,C ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை 4 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
ஏனைய பகுதிகளில் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 9.45 மணிவரை 5 மணிநேரம் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.