மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட தனலாபம் பெருகும். சுபகாரிய விஷயங்களில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சுய தொழில் ஏற்றம் காண்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு தேவையற்ற வழிகளில் எதிரிகள் தொல்லை அதிகரிக்கும் எனவே கவனம் தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதிலிருக்கும் கவலைகளை அகற்றிவிட்டு உற்சாகத்துடன் இருப்பது நல்லது. சுபகாரியத் தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். குடும்ப ஒற்றுமையில் குறைவிருக்காது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கடமையில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்க்கவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் தள்ளி செல்லும். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவை பெறுவதற்கு போராடுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகளை சுமக்க வேண்டியிருக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்து வந்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கப் போகிறது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கொடுக்கும். சுபகாரியத் தடைகள் விலகும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால், விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் வருமானம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்டநாள் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் உடன் ஆரோக்கியமான போட்டி நிலவும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தினருடன் செலவிடக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சமயோசிதமாக செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் நிச்சயம். கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளை தாண்டி துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுபகாரியத் தடைகள் விலகும். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். சுபச் செய்திகள் வெளி ஊரில் இருந்து கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் சாதக பலன் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். வெளியிட பயணங்களின் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதால் எச்சரிக்கை தேவை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்த தொய்வு மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மன குழப்பம் அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும் இருப்பினும் உற்சாகத்திற்கு குறைவிருக்காது.