உக்ரைனின் கார்கிவ் அருகே உள்ள சுகுவேவ் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடந்ததை காட்டும் செயற்கைக்கோள் படம் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் பகிரப்பட்டுள்ளது.
நாட்டின் கிழக்கில் உள்ள இந்த விமான தளத்தில் இருந்து புகை மேலெழும்புவதை பிளானட் லேப்ஸின் செயற்கைக்கோள் படம் காட்டுகிறது.
உக்ரைனை சுற்றியுள்ள விமானப்படை தளங்கள் மற்றும் பிற இராணுவ நிலைகளையும் ரஷ்யா இலக்கு வைத்து முன்னேறி வருகிறது.