மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை சந்தோஷமாக கழிக்க வாய்ப்புகள் உண்டு. உழைப்புக்கேற்ற பலன்கள் கைமேல் கிடைத்துவிடும். லட்சியங்கள் நிறைவேறும் நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமைய போகின்றது. நீண்ட தூர பயணங்களுக்கு வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சிறந்த அங்கீகாரத்தை பெற போகிறீர்கள். உங்களுடைய பொறுப்பு இன்னும் கொஞ்சம் கூடுதலாக போகின்றது. திறமையை வெளிக்காட்ட கூடிய நேரம் வந்துவிட்டது.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதலான முயற்சி தேவை. ஒன்றுக்குப் பலமுறை முயற்சி செய்தால்தான் ஒரு காரியத்தில் வெற்றி அடைய முடியும். அதற்காக சோர்வடைய வேண்டாம். மனம் தளர வேண்டாம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் இன்று மனசோர்வு காணப்படும். முன்கோபம் வரும். இருப்பினும் நிதானத்தை கடைபிடித்து பொறுமையோடு உங்களுடைய வேலைகளை பிளான் செய்துகொண்டால் எந்த பிரச்சினையும் கிடையாது. குடும்ப உறவுகளை கொச்சம் அனுசரித்துச் செல்லுங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக அமையப்போகின்றது. வீட்டில் உறவினர்கள் வருகை இருக்கும். நண்பர்களின் மூலம் தொலைபேசியிலோ நேரிலோ நல்ல செய்தி ஒன்று காத்திருக்கின்றது. புதிய முயற்சிகள் வெற்றி தரக்கூடிய நாளாக அமையும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்பட்டு உங்களுடைய வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளதால், உறவுகளை அனுசரித்துச் செல்ல வேண்டும்.
துலாம்:
இன்று வாழ்க்கை என்றால் என்ன என்பதை நன்றாக புரிந்து கொள்ளப் போகிறீர்கள். நல்லது கெட்டதை உணர்த்தும் அளவிற்கு ஒரு சம்பவம் நடக்க வாய்ப்புகள் உள்ளது. உலகத்தைப் புரிந்து கொள்ளப் போகிறீர்கள். வாழ்க்கையை சரியான கட்டத்திற்கு எடுத்துச் செல்ல சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். எப்போதும் மௌனம் நல்ல முடிவை கொடுக்காது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் தெளிவாக இருக்கப் போகிறீர்கள். மன குழப்பத்தில் இருந்து விடுபட்டு சில விஷயங்களில் நல்ல முடிவை எடுத்து வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வீர்கள். வெற்றி உங்கள் பக்கம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், இன்றைய நாள் எந்த பிரச்சினையும் இல்லாமல் செல்ல போகின்றது. உடல் அசதி இலேசாக இருக்கும். கொஞ்சம் ஊட்டச்சத்து நிறைந்த பழச்சாறுகளை குடித்து நீங்களே உங்களை உற்சாகப் படுத்திக் கொள்ளுங்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. அலுவலகத்தில் நீங்கள் எதிர்பாராத பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. பெரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்தால் அதை தட்டிக் கழிக்காதீர்கள். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். எதுவும் உங்களால் முடியும் என்று நம்புங்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்க போகின்றது. உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளுங்கள். பயணத்தின் போது கவனமாக இருங்கள். சில ஏமாற்றங்கள் இருந்தாலும் பெரியதாக பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகரிக்கும். அதேசமயம் கொஞ்சம் சோம்பேறித்தனம் உள்ளே புகுந்து ஆட்டி படைக்கும். வாழ்க்கையில் முன்னேற, சில சொகுசான விஷயங்களை விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும். அப்போதுதான் நினைத்த இலக்கை சீக்கிரம் அடைய முடியும்.