நன்னேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹா நன்னேரிய பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த முதியவர் நேற்றிரவு தனது தோட்டத்திற்கு சென்ற வேளையில் போதுகல்கெட்டியாவ வீதியில் வைத்து காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதன்படி உயிரிழந்தவர் 74 வயதுடைய மஹாநன்னேரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சடலம் கல்கமுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விசாரணைகளை நன்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.