பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில், இராணுவ வீரர் கைது.. இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறை சமாதானம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் கையை கடித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அனுராதபுரம் ஹிரிபிட்டியாவ பொது மைதானத்தில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை காண மைதானத்திற்கு சென்றிருந்தவர்களில் இரண்டு தரப்பினருக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.
மேற்படி சண்டையை தடுத்து சமாதானப்படுத்துவதற்கு சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் கையை இராணுவ சிப்பாய் கடித்துள்ளார்.
சம்பவத்தில் கல்னேவ பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி இடது கையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயும், பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹோமாகமை பிரதேசத்தை இந்த சந்தேக நபர், இலங்கை இராணுவத்தின் அரலகங்வில இராணுவ முகாமில் பீரங்கி படைப்பிரிவில் சேவையாற்றி வருகிறார்