வெளிநாடுகளுக்கு செல்வதற்கு குறிப்பாக ஐரோப்பியா, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு மேற்படிப்புக்காக உரிய அனுமதி பெற்று விசாவுக்காக விண்ணப்பிக்கும் போது பெரும்பான்மையானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்ற நிலைமை தற்போதைய சூழலில் அதிகரித்து காணப்படுகின்றது.
விசா நிராகரிப்பு தொடர்பாக தூதரங்களினால் வழங்கப்படும் கடிதத்தில் இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமையை காரணமாகவும், தரமற்ற அரசியல் நிலை காரணமாகவும் நீங்கள் இலங்கைக்கு உங்களுடைய படிப்பை மேற்கொண்டு திரும்பாமல் இருப்பதற்கு சாத்தியம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் உங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றது என வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை மேற்படிப்புக்காக செல்பவரின் கல்வியைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் ஏனைய வெளிவிசா, நண்பர்கள,; உறவினர்ககைள பார்க்கச் செல்லும் விசா மற்றும் சுற்றுலா விசாக்கள் மீதும் தாக்கத்தை செலுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது.