யூனிஸ் புயலின் தாக்கத்தால் பல ஐரோப்பிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புயல் தாக்கம் காரணமாக இங்கிலாந்தில் சுமார் 400,000 மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.
மேற்கு ஐரோப்பாவை தாக்கிய அதீத பாதிப்புகளை ஏற்படுத்திய புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகின்றது.
சுமார் 400,000 மக்கள் இருளில் மூழ்கியுள்ளதுடன், மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அயர்லாந்து, பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் மரங்கள் விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன்,இங்கிலாந்தின் வெல்ஸ் பகுதியில் உள்ள தேவாலயத்தின் கோபுரம் சேதமடைந்தது.ஏராளமான மரங்கள் சாய்ந்து, கட்டிடங்கள் சேதமடைந்தன.
இதன் காரணமாக லண்டன் முழுவதும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.