பிரித்தானியாவில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் கோல்டன் விசா ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு உள்விவகாரத்துறை செயலர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விசா ரத்து செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் உள்துறை செயலாளர் தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் பங்கு மூலதனம் அல்லது கடன் மூலதனம் செயலில் உள்ள மற்றும் வர்த்தகம் செய்யும் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்தால் பிரித்தானியாவிற்குல் நுழைவதற்கும் தங்குவதற்கும் கோல்டன் விசா வழிவகுத்தது.
இந்த விடயம் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது, மேலும் சில வழக்குகள் பாதுகாப்புக் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன, இதில் மக்கள் சட்டவிரோதமாக தங்கள் செல்வத்தைப் பெறுவது மற்றும் ஊழலுடன் தொடர்புடையவைகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், சீர்திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று அதனை ரத்து செய்வதற்கு உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. குடியேற்றத்திற்கான அரசாங்கத்தின் புதிய திட்டத்தை இது நிரூபிக்கிறது.
மேலும், குடியேற்ற முறையை தவறாக பயன்படுத்த விரும்புவோருக்கு எதிராக அரசாங்கம் உறுதியாக இருப்பதை இந்த நடவடிக்கை எடுத்து காட்டுகின்றது. இது குறித்து உள்துறை செயலாளர் பிரிதி படேல் கருத்து வெளியிடுகையில்,
எங்கள் நாட்டின் குடியேற்ற முறையை தவறாக பயன்படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது. குடியேற்றத்திற்கான புதிய திட்டத்தின் கீழ், தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் மற்றும் கறுப்பு பணத்தைத் திணிக்கும் ஊழல் மிகுந்த நபர்களை நிறுத்துவது உட்பட பிரித்தானிய மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறேன்.
கோல்டன் விசா ரத்து செய்யப்படுவதன் மூலம் மோசடி மற்றும் சட்டவிரோத நிதிக்கு எதிரான எமது புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கையின் தொடக்கமாகும்.
மேலும் இந்தியா, சீனா, மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள பெரும் பணக்கார முதலீட்டாளர்கள் தங்கள் நாடுகளில் சட்டவிரோதமாக சேர்த்த வளங்களை பிரித்தானியாவில் முதலீட்டு செய்து வருகின்றனர்.
இத்தகைய சட்டவிரோத முதலீடுகளை பிரத்தானியாவில் தடுப்பதற்காகவும் இந்த ரத்து அமல்படுத்தப்பட்டு இருப்பதாக ப்ரீத்தி படேல் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் innovator என்ற புதிய விசா முறை பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.