இலங்கை பிரவு ஒருவரின் மகன் மற்றும் மோட்டார் ஓட்டபந்தைய வீரரின் அச்சுறுத்தல் காரணமாக சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் ஏலத்தை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், ஆவணங்களில் பிழைகள் மற்றும் வாகன உதிரிபாகங்களின் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க பிரினர் தெரிவித்துள்ளனர்.
ஆவணங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு ஏலம் நடத்தப்படும் என பிரிவினர் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
உரிமையாளர் இல்லாத இந்த சொகுசு வாகனங்களின் பாகங்களை காணவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
எப்படியிருப்பினும் இந்த நடவடிக்கைகக்கு பின்னால் உள்ள இரண்டு பிரபலங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தகவல் வெளியிடப்படும் என அறிவிக்க்பபட்டுள்ளது