அனுராதபுரத்தில் இணையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இசைநிகழ்ச்சியில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல மருத்துவர் ஒருவர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இசைநிகழ்ச்சியை சுற்றிவளைத்து பல்வேறு போதைப் பொருட்களை வைத்திருந்த ஏழு சந்தேகநபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களை சுற்றி வளைத்தபோது நாக்கின் கீழ் வைக்கும் போதை மாத்திரைகள் மற்றும் கேரள கஞ்சா போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சமூக ஊடக பிரச்சாரங்களின்படி, 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விருந்தில் இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்த பொலிஸார் , சோதனையின் போது பலர் போதைப்பொருளை உட்கொண்டிருப்பதும் தெரியவந்ததாக கூறியுள்ளனர்.
இளம் நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்தியரும் இந்த விருந்தில் கலந்து கொண்டதாக தெரிவித்த பொலிஸார், கைதான சந்தேகநபர்கள் 7 பேரும் நேற்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்