இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ரொய்ஸ், லெம்போகினி, ஜகுவார், மெர்சீடிஸ் பென்ஸ், ஹமர் மற்றும் பேருந்துகள் இரண்டினை ஏலமிடுவதற்கு சுங்க பிரிவு மேற்கொண்டிருந்த தீர்மானம் இறுதி சந்தர்ப்பத்தில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
சுங்கத்தால் கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனங்கள் எதிர்வரும் வியாழன் அன்று ஏலம் விடப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
சுங்கத்துறை பிரிவு இயக்குநர் நாயகம் ஜி.வி. ஹரிப்ரியவின் அறிவுறுத்தலின் பேரில் 11 மணியளவில் ஏலம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எப்படியிருப்பினும் ஏலம் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட வாகனங்கள் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டதால் அதன் உரிமையாளர் தெரியவில்லை எனவும் சில வாகனங்களின் பாகங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தற்போது வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் இந்த அதிசொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலம் விடுவதற்கான டெண்டர் நடைமுறைகள் உள்ளதாகவும், சுங்கத் திணைக்களத்திற்கு வருமானம் ஈட்டுவதற்காக இவ்வாறான ஏலங்கள் நடத்தப்படுவதாகவும் சுங்கப் பேச்சாளர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்தகைய ஏலங்களை நடத்துவதற்கும் இடைநிறுத்துவதற்கும் சுங்கப் பணிப்பாளர் நாயகத்துக்கும் அதிகாரம் உண்டு என அவர் மேலும் குறிப்பிட்டு்ளளார்.