யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள 15 மில்லியன் இயந்திரம் வேண்டுமென்றே குத்தி உடைக்கப்பட்டதா என கண்டறிய பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி நவீண எக்ஸ் கதிர் இயந்திரம் மிக அண்மையில் பொருத்திய நிலையில் அதில் ஓர் முக்கிய பகுதி வேண்டுமென்றே குத்தி உடைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் முன்பும் ஓர் தடவை இயந்திரத்தின் முக்கிய பகுதி ஒன்று களவாடப்பட்டபோதும் அது இறுதிவரை கண்டறியப்படவில்லை.
இதே நேரம் தற்போது புதிய இயந்திரம் பொருத்தப்பட்டு 4 தினங்கள் மட்டுமே இயங்கிய நிலையில் ஓர் பகுதியில் உடைவு காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து பொலிஸார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.