வடக்கு மாகாணத்தில் நெல் கொள்வனவுக்காக இரண்டாம் கட்டமாக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான மு.நந்தகோபாலன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் நெல் ஆலைகள் ஊடாக போதிய நெல் கொள்வனவு செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல் அரிசி ஆக்கப்பட்டு ஏனைய கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடமாகாண கூட்டுறவு திணைக்களத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்காக 15 மில்லியன் ரூபா வழங்கப்பட்ட நிலையில் வடக்கு மாகாண நிதியிலிருந்து 25 மில்லியன் ரூபாய் இரண்டாம் கட்டமாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு 3 மில்லியன், கராச்சி தெற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு 5 மில்லியன் ரூபா, யாழ் மாவட்டத்தில் கொடிகாமம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் 5 மில்லியன், உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் 2 மில்லியன், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் மில்லியன் , துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் 2 மில்லியன்.
மேலும், வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் 3 மில்லியன் , வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கம் 2 மில்லியன் என கூட்டுறவுச் சங்கங்களின் ஆலைகளுக்கு நெல் கொள்வனவுக்காக குறித்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.