பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பெரகல சந்தியில் உள்ள கடைகளில் இருந்து நாளொன்றுக்கு குறைந்தது 10,000 ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்களை குரங்குகள் திருடி செல்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குரங்குகள் வாழும் காட்டு பிரதேசங்களில் மக்கள் வாழ்ந்தால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக பசி காரணமாக கடைகளில் உணவு திருடும் நடவடிக்கை குரங்குகள் ஈடுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
குரங்குகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சில வர்த்தகர்கள் மட்டைகள் போன்வற்றை வைத்திருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது.
மக்கள் குரங்குகளை தாக்கினால் அவை மோசமாக செயற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.