கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டியதோடு, நுண் நிதி கடன் நெருக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என தேசிய கூட்டுறவு அபிவிருத்தி அறக்கட்டளையின் தலைவர் சுரங்க ராபசிங்க தெரிவித்துள்ளார்.
கந்தளாய் விதாதா வள நிலையத்தில் இன்று(9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று நுண் நிதி நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகின்றது, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களை இனங்கண்டு அவர்களுக்கு லீசிங் அடிப்படையில் பணத்தினை வழங்கி வருவதோடு அம்மக்களுக்கு வட்டி அதிகரித்தவுடன் பணம் செலுத்தாததால் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றார்கள்.
பின்பு நிதி நிறுவன உத்தியோகத்தர்கள் பொது மக்களின் கழுத்தை நெறிக்கின்றார்கள். இவ்வாறு திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமன்றி நாடு முழுவதிலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறான நுண்நிதி நிறுவனங்களின் சேவைகளை நாம் பாராட்டுவதோடு அதனை ஒழுங்கான வேலைத் திட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமப்புற மக்கள் பணம் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறான நுண்நிதி பிரச்சினைகளால் உயிரை கூட இழப்பதற்கு தயங்குவதில்லை. அத்தோடு தற்போதைய கால கட்டத்தில் மக்களுக்கு விலையேற்றம் மற்றும் பொருளாதார சிக்கல்களும் ஏற்பட் டு வருகின்றன, அரசாங்கம் கிராமப்புற மக்களின் செயற்பாடுகளுக்கு புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.