யாழ்.கொடிகாமம் வரணி – இடைக்குறிச்சிப் பகுதியில் அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சிறப்பு அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டபோது ஏற்பட்ட இழுபறியின் போது அதிரடிப்படையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கையில் காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.