மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த விஷயத்திற்கு எதிர்மறையாக சில நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற பொறுப்புகளை சுமக்க வேண்டிவரும். கணவன் மனைவி ஒற்றுமையில் மேன்மை காணப்படும். தொலை தூரப் பயணங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பு என்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல்-வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருந்த கவலைகள் தீர்ந்து மன பாரம் குறையும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகளை கேட்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் பெருகும். ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் ஆக்க பொருத்தவனுகு ஆற பொறுக்க தெரிய வேண்டும் என்கிற பழமொழி நினைவில் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்களை வெற்றி காணும் யோகம் உண்டு.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். பெரிய மனிதர்களின் ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வருமானம் இரட்டிப்பாகும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சாதக பலன் உண்டு. கன்னி: கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற முடிவு ஆபத்தை கொடுக்கும். நீண்ட நாள் தீருமா? என்று நினைத்த ஒரு விஷயம் தீர்வுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகளை கவனிப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் கொடுக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துடிப்பாக செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற விஷயங்களை கருத்தில் கொள்ளத் தேவையில்லை. பொருளாதாரம் ஏற்றம் காணும் யோகம் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நீண்ட நெடிய பயணங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. முன் பின் தெரியாதவர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் செலுத்துங்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை மேலும் வருவார்கள் என்பதால் சிந்தித்துச் செயலாற்றுவது உத்தமம். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய ஒவ்வொரு முடிவு உங்களுக்கு சாதகமாக அமைய இருக்கிறது. வெளியிட பயணங்களின் பொழுது புதிய நட்புகள் உருவாகும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக தொகையை ஈடுபடுத்தி பெரிய லாபம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே செயலை செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வெளியிட நண்பர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் தவிர்த்துக் கொள்வது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் நீங்கள் புதிய பொறுப்புகளை ஏற்கும் சூழ்நிலை ஏற்படலாம். தட்டிக் கழிக்காமல் பொறுப்பாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. அக்கம் பக்கத்தினரும் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான பண விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் தைரியமாக துணிச்சலுடன் செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டு. முகத்தில் ஒரு புதிய பொலிவு காணப்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய விஷயங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.