தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி பகுதியில் நேற்று இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் ஒரு கிலோ 76 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது, போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரால் கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரிடமிருந்து கிடைத்த மேலதிக தகவலின் அடிப்படையில் இந்த மோசடியில் ஈடுபட்ட மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்படி கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் தோராயமான பெறுமதி 08 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என நம்பப்படுகிறது.
மேலும் சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் பேசாலை பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.