இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார்.
05.02.1997 நீதிபதியாக நியமனம் பெற்று வவுனியாவில் தனது முதல் நியமனத்தை நீதவானாக ஆரம்பித்து 05.02.2022 அதே வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக 25 ஆண்டுகள் பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதி என்ற பெருமைக்குரியவர் ஆகின்றார்.
இன்றைய வடக்கு – கிழக்கு மாகாண அனைத்து நீதிபதிகளிலும் 25ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முதல் பெருமைக்குரிய தமிழ் நீதிபதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1999 யாழ். செம்மணி புதைகுழி வழக்கு,
1999 மன்னாரில் காமாலிக்கா கொலை வழக்கு, மடு தேவாலய குண்டு வெடிப்பு வழக்கு, மற்றும் லயன் எயார் குண்டு வெடிப்பு வழக்கு
2000 – 2008 ஒன்பது ஆண்டுகள் கடுமையான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் வவுனியாவில் நீதிபதியாக கடமையாற்றியமை. ஜெயசிக்குறு தாக்குதல் காலம், யுத்த நிறுத்த காலம், மீண்டும் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட யுத்த காலத்தில் வவுனியா நீதிபதியாக கடமையாற்றினார்.
2006 வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் கொலை வழக்கு
2008 மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டமை
2009 இல் திருகோணமலை கோயில் குருக்கள் மனைவி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கியமை, அந்த கொலை வழக்கு தீர்ப்பு உயர் நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டமை.
2014 கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்
2015 கணவர் கொலை கொலை வழக்கில் இஸ்லாமிய பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை, தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டமை.
2015 யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்று மூவர் அடங்கிய தீர்ப்பாயத்தில் 1 நீதிபதியாக வித்தியா கொலை வழக்கில் தனித் தீர்ப்பு எழுதி மரண தண்டனை விதித்தமை.
2018இல் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்று யாழ். இளைஞன் கொலை வழக்கில் இரு இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தமை.
2022இல் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டு, தயா மாஸ்டர் வழக்கில் இரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கி விடுதலை செய்தமை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.
25 வருட காலப் பகுதியில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேற்குறித்த முக்கிய வழக்குகளுக்கான தீர்ப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.