மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுப்பியுள்ள பலன் கொடுக்கும் அமைப்பு என்பதால் மனகவலை நீங்கும். சுபகாரிய தடைகள் விலகி மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவை இல்லாத கடன்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இறை வழிபாடுகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். பயணங்களின் பொழுது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணிய எண்ணம் ஈடேறும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும் இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையில் பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியிடங்களில் பேச்சில் இனிமையை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை தைரியமாக எடுத்துரைப்பது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியாக முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் அனுகூல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு காரிய தடை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் பொறுப்புணர்வு தேவை. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் ஏற்படலாம். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மனக் கசப்புகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மையாக செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. குறுக்கு வழியில் யோசிக்காமல் இருப்பது நல்லது. சிறு தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை எதிர்த்து துணிச்சலுடன் போராடுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விரும்பிய விஷயங்களை அடைவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வலுவாக கூடும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி இருக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பண வரவு வருவதில் சிறப்பான பலன் உண்டு. பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். சுபகாரியத் தடைகள் விலக விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் நாணயம் தேவை. சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நீண்ட நாள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நிகழ்வுகள் நடைபெறும். தொலைதூர நண்பர்களை சந்திப்பீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் உண்டு. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. உங்கள் எதிர்பார்ப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மன கசப்புகள் ஏற்படலாம். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு தொழில் சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. தேவையற்ற வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.