கொழும்பு பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (28) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பம்பலப்பிட்டி கிரெஸ்டர் பகுதியில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து குறித்த சிறுவன் தவறி விழுந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 15 வயதான சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் அதே பகுதியில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் தந்தை வெள்ளவத்தையில் பிரபல வர்த்தகர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.