மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறது. கணவன் மனைவியிடையே தேவையற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு மனநிறைவு ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கணவன் மனைவியிடையே நடைபெற்றுக் கொண்டிருந்த பனிப்போர் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சியில் ஈடுபடும் பொழுது கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அற்புதமான அமைப்பாக இருந்து வருகிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எடுக்கும் முடிவுகளில் சுய முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் செயலாற்றுவது நல்லது அல்ல.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களை சம்பந்தப்பட்ட நபர்களுடன் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பது இடையூறுகள் ஏற்படலாம். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் வீட்டு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூல பலன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வம்பு வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் குறித்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்கள் அதிகரிப்பு ஏற்படும் என்பதால் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காவிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும் என்பதால் விழிப்புணர்வு தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகன ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டியாளர்களை திறம்பட வென்று காட்டும் யோகம் உண்டு. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு சிக்கல் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் மேலும் வலுவாக இருப்பதால் கூடுமானவரை பேச்சில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் விரயங்களும் உண்டாகும் என்பதால் கூடுமானவரை தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படும் எனவே டென்சனுடன் காணப்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வதால் மன உளைச்சல் நீங்கும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்