கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் பலியாகி உள்ளார்.
காங்கேசன்துறை நோக்கி சென்ற உத்தரதேவி ரயில் ரயில் கடவையை கடந்த மாணவன் மீது மோதியதில் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி இந்துக்கல்லூரி முன்பாக மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் என தெரியவந்துள்ளது.
நாளை பாடசாலையில் உயர்தர மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்வுக்கு ஒன்றுக்காக ஆடை வாங்கச் சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.