உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துவருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க தங்களால் முடிந்தவரை முயற்சித்ததாகவும், இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன என ரஞ்சித் ஆண்டகை கூறினார்.
இந்த நிலையில், சர்வதேசத்திற்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் அதற்கும் அர்த்தம் ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்வது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்காக இலங்கையுடன் தொடர்பு வைத்திருக்கும் சக்தி வாய்ந்த நாடுகளையும் அணுகவுள்ளேன்.
இவ்வளவு நாட்களாக உள்நாட்டில் நீதி கிடைக்கும் என நம்பியமை காரணமாக மேற்கூறிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ் அறிவிப்பு ஜனாதிபதி உட்பட பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.