மட்டக்களப்பு மாவட்ட புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு புதிய பொறியியலாளராக w. பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடமையாற்றிய பொறியியலாளர் பாரிஸ் அவர்கள் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது புதிய பிராந்திய பொறியியலாளராக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்வு குறித்த பல்வேறு குற்றச்சாட்டு மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பல பகுதிகளில் மணல் அகழ்வு செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய பொறியியலாளரின் நியமனம் இடம்பெற்றுள்ளது.