கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள மெரினா நடைபாதை இன்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படது.
இன்று முதல் தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக குறித்த பகுதி திறந்திருக்கும்.
புதிதாக நிரமணிக்கப்பட்டுவரும் துறைமுக நகரத்திற்கு சொந்தமான இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையும் இரண்டாம் கட்டமாக பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.
துறைமுக நகரத்தில், படகுகள், ஏடிவி மணல் திட்டுகள், ஜெட் ஸ்கிஸ், கடற்கரை பூங்காக்கள், அக்வா கோல்ஃப் மைதானங்கள் மற்றும் பொதுமக்களின் பொழுதுபோக்குக்காக பல வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் வரைபடத்தை விரிவுபடுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுக நகரத்தில் புதிய முதலீடுகள், வேலை வாய்ப்புகள் நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினரின் கனவுகளை நனவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.