சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போதை களியாட்டத்தில் கலந்து கொண்டிருந்த 33 பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவம் கடவத்தை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் விடுதியில் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, விடுதியில் 33 பெண்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.