யாழ். மாதகல் கடற்கரையில் வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இணைந்து இன்று காலை 9.15 மணியளவில் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சட்டவிரோத மீன்பிடியைத் தடை செய்யுமாறு கோரியும் இந்திய இழுவைப் படகுகளினால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதில் அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே, மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரசேகர் மற்றும் மீனவ அமைப்புக்கள் என்பன இணைந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.